பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்றார். இதுவரை இந்தியா தங்கம் 3, வெள்ளி 9, வெண்கலம் 3 மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பாரா தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்றார். இதேபோட்டியில் மற்றொரு மாற்றுதிறனாளி வீரரான முகமது பாசில் 2வது இடம் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளி வென்று கொடுத்தார். அதேபோல, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஶ்ரீசங்கர் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றார்.

இதுவரை இந்தியா இரண்டு தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், இந்தியா பதக்கப்பட்டியலில் தற்போது 8 வது இடத்தில் உள்ளது.