சென்னை: எல் நினோ பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகியிருக்கும் எல் நினோ பாதிப்புகள் குறித்து ஆராயவும், அதை தொடர்ந்து கண்காணித்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக வருவாய் மற்றும் பேரிடர் ஆணையர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எல் நினோ பாதிப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் கண்காணித்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை இந்த குழு கண்காணித்து வறட்சி மற்றும் வெள்ளத்தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசுக்கு வழங்கும்.

இந்த குழுவில், அண்ணா பல்கலைக்கழக கால நிலை மாற்றத்துறை தலைவர் காமினி, சென்னை ஐஐடி நீர் மேலாண்மைத்துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழு உறுப்பினர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமசந்திரன், வானிலை ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.