திருவண்ணாமலையில் நடத்திய இளைஞரணி மாநாட்டால் எதிர்க்கட்சியில் இருக்கும் பலருக்கு தூக்கம் போய் விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் இன்று நடைபெறவிருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டையொட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

1994-ம் ஆண்டில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல். தி.மு.க.வை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். தி.மு.க.வை வளர்த்த இளைஞர்கள் தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இனிமேல் தி.மு.க.வுக்கு இளைஞர்கள் வருவார்களா என்று சிலர் வன்மத்தை வெளிப்படுத்தினர். தி.மு.க. மீதான அவதூறுகளை உடைத்தெறிந்து தமிழகம் முழுவதும் இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து உதயநிதி சாதனை படைத்துள்ளார்.

இது போதாது என்று மண்டல அளவில் இளைஞரணி சந்திப்புகள் நடத்துகிறோம் என்று மாநாடுகள் நடத்தி வருகிறார். எங்களுக்கு அடுத்தபடியாக தி.மு.க.வை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை உதயநிதி சிறப்பாக செய்து வருகிறார். திருவண்ணாமலையில் நடத்திய இளைஞரணி மாநாட்டால் எதிர்க்கட்சியில் இருக்கும் பலருக்கு தூக்கம் போய் விட்டது. இனி மேல் மற்ற கட்சிகள் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை தி.மு.க இளைஞரணிதான் கொடுக்கும் என நினைக்கிறேன்.

7-ம் தேதி விருதுநகரில் இளைஞரணி கூட்டம் என்று சொன்னதும் புது உற்சாகம் பிறந்தது. எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை விருதுநகர் மாநாட்டில் பகிர்ந்து கொள்ள போகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.