வாஷிங்டன்: மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடங்​கியது. கடந்த ஏப்​.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆனால், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சென்ற சில சரக்கு கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதன்​காரண​மாக கடந்த ஜூலை 13-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலை தொடங்​கியது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்​கு​கள், உள்​கட்​டமைப்​பு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, குவைத், ஜோர்​டான் உள்​ளிட்ட நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தீவிர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வு: இரண்​டாம் உலகப்​போருக்கு பிறகு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக ஈரான் உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்டு ராணுவம், தீவிர​வாத அமைப்பு போன்று செயல்​படு​கிறது. ஈரானுக்கு எதி​ரான போருக்கு அமெரிக்கா முழு​வீச்​சில் தயா​ராக உள்ளது. எனினும், போரை நிறுத்​து​மாறு ஈரானும், மத்​திய கிழக்கு நாடு​களும் கோரிக்கை விடுத்​துள்​ளன. இதன்​மூலம் அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த முடி​யும் என்று அந்த நாடு​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றன. இதை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி முழு​மை​யாக திறக்​கப்பட வேண்​டும். ஈரானின் அணு ஆயுத அச்​சுறுத்​தலுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்​ப​தில் அமெரிக்கா உறு​தியாக உள்​ளது. இதை மையப்​படுத்தி அமைதி ஒப்​பந்​தம் வரையறுக்​கப்பட வேண்​டும். உலக நன்மை கருதி போர் நிறுத்த முடிவை எடுத்​துள்​ளோம். அமெரிக்​காவோடு இணைந்து போர் நிறுத்​தத்தை அமல்​படுத்த இஸ்​ரேலும் உறுதி அளித்​திருக்​கிறது. இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.