காபூல்: இந்தியாவுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இப்ராஹிம் ஜத்ரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வரவுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் (செப். 13, 15, 17), டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக, துவக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் நியமிக்கப்பட்டார். வலது தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக், அணிக்கு திரும்பினார். 'ஆல்-ரவுண்டர்களான' அஸ்மதுல்லா உமர்சாய், குல்பதின் நைப், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், நுார் அகமது, முகமது நபி இடம் பெற்றுள்ளனர்.

ஆப்கன் அணி: இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நுார் ரஹ்மான் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா உமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்யால் கரோட்டி, நுார் அகமது, முஜீப் உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, அப்துல்லா அகமத்சாய், நவீன் உல் ஹக். மாற்று வீரர்கள்: இசாஜ் அகமத்சாய், ஷகிதுல்லா கமல், பரீத் அகமது மாலிக்.