சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 13,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 28) ஆபரண தங்கம் கிராம் 13,215 ரூபாய்க்கும், சவரன் 1,05,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜூலை 29), தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 13,155 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் சரிவடைந்து, 1,05,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (ஜூலை 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 13,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.