திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. நேற்றுமாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப் பட்டனர்.. கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய்யாபிஷேகம், உஷா பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, மலர் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெற்றன.. இதையடுத்து கற்பூர ஆழியில் தீபமேற்றப்பட்டதும், பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாள்களுக்கு சிறப்பு பூஜைகளும் தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 21 ஆம் தேதி இரவில் ஹரிவராசனத்துடன் கோயில் நடை அடைக்கப்படும். மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் கோயிலுக்கு வருவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
July 16, 2026
இந்தியா
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்