அ.தி.மு.க.வில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:
அ.தி.மு.க.வில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க வேண்டும். அ.தி.மு.க.வை உடைக்கும் எண்ணம் இல்லை. அ.தி.மு.க.வை உடைக்கிறோம் என்பது அவதூறு. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் பிரிந்து சென்ற போது நாங்கள் எதிர்த்தோம். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைவரையும் அரவணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று கூறினார்.