அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை உறுப்பினர்கள் மு. தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாளை 5-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு தேவைப்படின் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் வரும் 16-ம் தேதி நடைபெறும். வரும் 20-ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேர், அ.தி.மு.க சார்பில் 2 பேர் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது. 2 மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றிணை கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு கொடுக்க அ.தி.மு.க. முடிவு எடுத்துள்ளதாகவும் மீதமுள்ள ஒரு இடத்திற்கான வேட்பாளராக தம்பிதுரையை அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்படவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.