விருதுநகர் மாவட்டம், அழகாபுரி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 2026-ஆம் ஆண்டிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள அழகாபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் ரூ.1.81 கோடி மதிப்புள்ள தங்க நகை மோசடி முறைகேடு நடைபெற்றது.2014-ஆம் ஆண்டு சுமார் 115 விவசாயிகள் தங்கள் நகைகளை சங்கத்தில் அடகு வைத்திருந்தனர்.அடகு வைக்கப்பட்ட நகைகளைத் திருப்பிக் கொடுத்ததாகக் கணக்கு எழுதிவிட்டு, அந்த நகைகளை வேறு வங்கிகளில் அதிகாரிகள் மறு அடமானம் வைத்து முறைகேடு செய்தது தெரியவந்ததுஇந்த சங்கத்தில் மட்டும் ரூ.1.81 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் முனியாண்டி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நகைகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட விவசாயிகளின் நகைகளை மீட்டு, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

"இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் (Sub Judice) இருப்பதால், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பெறுவதற்காக அருப்புக்கோட்டை வட்ட அலுவலகம் (Circle DR, Aruppukottai) தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து விவசாயிகளின் நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.