மதுரை மாநகராட்சி மண்டலம் 1 பொதுமக்கள் குறைதீர் கூட்டம் சர்வேயர் காலனி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,உதவி ஆணையாளர் பிரபாகரன், நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநகராட்சியின் மண்டலம் 1-க்கு (கிழக்கு) உள்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர்பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங் குடி, கற்பகநகர், பரசுராம்பட்டி, லூார் துநகர், ஆத்திகுளம், கோ.புதூர், வள் ளுவர் குடியிருப்பு, எஸ்.ஆலங்குளம், அலமேலுநகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சௌராஷ்டிரபுரம், தாசில்தார்நகர், வண்டியூர் ஆகிய பகு திகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில் வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் குழப்பம்
மதுரை மாவட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் காலையில் மண்டலம் ஒன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற போது மின்சாரம் கட்டானது. இதனால் பரபரப்பான அதிகாரிகள் உடனடியாக ஜெனரேட்டரை ஆன் செய்தனர். ஆனால் கரண்ட் வந்த பிறகும் லைனை மாற்றினால் கரண்ட் கட் ஆகும் என்று யோசித்துக்கொண்டு கரண்ட் வந்த பிறகும் கமிஷனர் இருப்பதால் ஒன்றரை மணி நேரம் ஜெனரேட்டரை இயக்கினர். அறிவிக்கப்படாத மின்வெட்டினால் குறைதீர் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
https://drive.google.com/file/d/1DlF5i8eop1OJZk1kON_Q8nNcBXdmR2ME/view?usp=drivesdk
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியும் ஏற்படுத்தப்படாததால் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.