அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டு முதல் அனைத்து கார்கள், சிறிய மற்றும் பெரிய டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு என வாகனத் துறையில் உள்ள பல்வேறு கனடா பொருட்கள் மீதான வரியை 50 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கனடாவின் தொழில் நிறுவனங்களை பாதிக்கும் நோக்கில் அமெரிக்க வரிகள் விதிக்கப்படுவதாக கார்னி குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தையின்போது கனடாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுபோல் நடத்தியதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.