தெஹ்ரான்: அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.
ஈரானின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏமனின் மலைப்பகுதிகளில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தின் மீது ஈரானின் கவனம் திரும்பி இருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. ஈரானின் மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பிறகு ஹவுதி அமைப்பிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.