சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 14-ம் தேதி திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.