சென்னை: எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு முடிய உள்ளதால் எரிவாயு முகமைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர் .
வீட்டு எரிவாயு இணைப்புகளுக்கான ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், இ-கேஒய்சி செயல்முறையின் முதல் கட்டமான ஆதார் எண்ணை 14 இலக்க எல்பிஜி (LPG) அடையாள எண்ணுடன் இணைப்பதிலேயே சில நுகர்வோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கால கெடு நெருங்கி வருவதால், பயோமெட்ரிக் பதிவு செய்யாத நுகர்வோர் அந்தந்த எரிவாயு முகமைகளில் குவிந்து வருகின்றனர்.