மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செல்லம்பட்டி பாண்டியம்மாள் என்ற பெண் விவசாயி அதிகாரிகளை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை கிராமத்து வட்டார வழக்கில் எழுப்பியதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. மேலும் தனது சொந்த ஊரில்
சுடுகாட்டினைசுடுகாட்டினை தாமே சுத்தம் செய்து உள்ளதாகவும் ஒத்தப்பட்டி 4வது கிளை கால்வாய் சரி செய்யப்படவில்லை 13 சென்ட் ஊரணி பட்டா போட்டு தரப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு கிராமத்து வட்டார வழக்கில் அதிகாரிகள் மாறிவிட்டால் என்ன அவர்கள் டிஸ்டார்ஜ் ஆகி போய்விட்டால் புதிய அதிகாரி பழைய பைல்களை பார்க்க மாட்டார்களா என உரிமையோடு கேள்வி எழுப்பியது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலகலப்பை உருவாக்கியது.
தொடர்ந்து மேலூர் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு அதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லியும் மேலூர் கொட்டாம்பட்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக27 ம் தேதி மதுரை வருவாய் அலுவலர் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் இணைந்து மேலூரில் கூட்டம் நடத்திடுவதோடு அதுவரை அந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்திடவும் உத்தரவிட்டார்.
வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் படிவம் ஒன்று வழங்கிடாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது மேலும் பயிர் காப்பீட்டுத் தொகை கடந்த கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு நடப்பு கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி 29 பேருக்கு வழங்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படக் கூடிய விவசாய அடையாள அட்டையை பொறுத்தவரை அவர்களுக்குரிய நில வகைப்பாட்டின்படி அட்டை வழங்கிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இலவசம் மின்சார திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரக்கூடிய விவசாயிகள் நிலத்தை விற்றால் பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழ உரப்பனூர் கிராமத்தில் சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை பாப்பாங்குளம் கண்மாய்கரை சேதமடைந்து காணப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர் மேலூர் வெள்ளலூர் மாயாண்டி கன்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர். முழுமையாக பட்டாவாக இருந்தால் 15 நாட்களுக்குள்ளும் உட்பிரிவாக இருந்தால் ஒரு மாதத்திற்குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள ராமர் கோவில் ஊரணி சாக்கடை நீர் கலக்காமல் சரி செய்ய வேண்டும் என்றும் விக்கிரமங்கலம் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் மேலும் எழுமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட கோரிக்கை வைத்தனர்.
சக்கிமங்கலம் சிப்காட் பகுதியில் மதுரை மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதனால் கழிவு நீர் அருகில் உள்ள வயல்வெளிகளில் கலந்து பாதிப்பு ஏற்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விண்ணக்குடி கிராமத்தில் கால்வாய் பராமரிப்பு பாலம் புதிதாக கட்டுவதோடு அங்குள்ள டாஸ்மாக் கடையினை அகற்றிட கோரிக்கை வைத்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சாந்தி, வேளாண்மை துறை இணை இயக்குனர் பொறுப்பு ராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா, பெரியார் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சிவ பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.