சென்னை, செப்.6-

முதலமைச்சர் விஜய் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளதால், அது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே முதல் 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்களின் செயல்பாடு தொடர்பாக உளவுத்துறை ரிப்போர்டை கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், தற்போது 100 நாட்களின் முடிவில் இரண்டாவது ரிப்போர்டையும் கேட்டு பெற்றுள்ளாராம். இதிலும் எந்த முன்னேற்றமும் காணாத நபர்கள் தான், அமைச்சரவை பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனராம். இதில் யாருக்கு பதவிகள் பறிபோகும், யாருக்கு கூடுதல் இலாகாக்கள் கிடைக்கும், புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வெளியேற்றப்படும் மூன்று அமைச்சர்கள்:

வெளியாகியுள்ள தகவலின்களின்படி, பொறுப்புக்கு மதிப்பு சேர்க்கும் வகையில் சரிவர செயல்படாத மூன்று பேரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளாராம். முதலில் அமைச்சர் கீர்த்தனாவுடன் மோதல், அரசு நிகழ்ச்சியின் மேடையிலேயே மாவட்ட ஆட்சியரை எச்சரித்தது, ஜட்டியோடு உட்காரவைத்து அடிப்பேன் என மிரட்டிய ஆடியோ வெளியாகி வைரலானது ஆகியவை ஏற்கனவே அவர் மீதான கரும்புள்ளிகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திலும் சொதப்பியதால் சமூக நீதி அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது தலைமை அபெசெட் ஆகியுள்ளதாம்.

வாக்காளர்களை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியது, கட்சி தலைமைக்கே தெரியாமல் டெல்லியில் சில தொழிலதிபர்களை சந்தித்தது, அவரது உறவினர் ஒருவர் துறைக்குள் போடும் ஆட்டம் போன்ற காரணங்களால் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் விஜய் பாலாஜியும் ஹிட்லிஸ்டில் இடம்பெற்றுள்ளாராம். இறுதியாக கடைசி நேரத்தில் தவெகவில் இணைந்து தேர்தலில் வென்று அமைச்சரான ரஞ்சித் குமார், துறையை கையாள முடியாமல் தவித்து வருகிறாராம். சட்டமன்றத்தில் அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்த, முதலமைச்சரே அவரது சார்பில் மன்னிப்பு கோரியிருந்தார். இதனால் ரஞ்சித்குமாரையும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

ராஜ்மோகன் காட்டில் அடைமழை..!

அமைச்சரவை மாற்றங்களை தவிர்த்து சிலருக்கு இலாகாக்களை மாற்றவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, ராஜ்மோகன் வசமுள்ள பள்ளிக்கல்வித்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையை கவனித்து வரும் குமாரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாம். அதற்கு ஈடாக ராஜ்மோகனுக்கு தகவல் தொழில்நு

ட்பத்துறை மற்றும் நிதித்துறை வழங்கப்பட பரிசீலிக்கப்படுகிறதாம். அதோடு முதலமைச்சர் வசமிருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையும் கூடுதலாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இலாகா மாறும் அமைச்சர்கள் யார்?

தமிழில் வாசிக்க மிகவும் சிரமப்பட்டு வரும் மரிய வில்சனுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டு, அந்த இலாகாவை கவனித்து வரும் கீர்த்தனாவிற்கு சமூக நலத்துறை வழங்கப்பட வாய்ப்புள்ளதாம். தொழிலாளர் நலத்துறை முகம்மது பர்வேஸிற்கு கைத்தறி மற்றும் நெசவுத்துறை , கனிம வள அமைச்சர் பிரபுவிற்கு வனத்துறை மற்றும் அறநிலையத்றை அமைச்சர் ரமேஷிற்கு செய்தி & விளம்பரத்துறை ஆகியவை கூடுதல் இலாகாவாக ஒதுக்கப்படலாமாம்.

புதியவர்களுக்கு வாய்ப்பா? அறிவிப்பு எப்போது?

சிலர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை பிடிக்க பல தவெக எம்.எல்.ஏக்களும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அதில் ஆர்.எஸ். முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், வி.எஸ். பாபு, பாலமுருகன், கனிமொழி மற்றும் கார்த்திகேயன் என பட்டியல் நீள்கிறது. ஆனால், இவர்களில் யாருக்கெனும் வாய்ப்பு கொடுத்து மற்றவர்களை கைவிட்டால், அது கட்சிக்கும் தேவையில்லாத அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதால் புதியதாக யாரையும் அமைச்சரவையில் சேர்க்க தலைமை விரும்ப

வில்லையாம். அதேநேரம், இது எல்லாம் உத்தேச பட்டியல் தான் எனவும், முதலமைச்சர் விஜய் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து

க்கொண்டு சென்னை திரும்பியதும் தமிழ்நாடு அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் எனவும் கூறப்படுகிறது.