புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் உள்ள ஞான​வாபி மசூ​தி, மது​ரா​வின் ஷாஹி ஈத்கா மசூ​தி, சம்​பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்​கும் இடம் தொடர்​பான வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த வழக்​கு​களை மத்​தி​யஸ்​தம் மூலம் தீர்த்​துக் கொள்ள வேண்டும் என்று நீதி​மன்​றம் பரிந்​துரை செய்​தது. ஆனால், இந்த வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தின் மூலமே தீர்க்​கப்பட வேண்​டும் என்று 3 வழக்​கு​களி​லும் சம்​பந்​தப்​பட்ட முஸ்​லிம்​கள் தெரிவித்​து​விட்​டனர்.

இதுகுறித்து வாராணசி ஞான​வாபி மசூதி தரப்பு வழக்​கறிஞர் அக்​லாக் அகமது கூறுகை​யில், “மத்​தி​யஸ்​தம் என்​பது மசூ​தியை இந்து தரப்​பினரிடம் ஒப்​படைப்​ப​தையே குறிக்​கும். எனவே, அதன் மூலம் இந்​தப் பிரச்​சனைக்​குத் தீர்வு காண வாய்ப்​பில்​லை. இதை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் கூறி​விட்​டேன். இந்து தரப்​பினர் கூறு​வது போல இடிக்​கப்​பட்ட எந்​தவொரு கோயிலின் இடத்​தி​லும் இந்த மசூதி கட்​டப்​பட​வில்​லை. இதனால், மசூ​தி​யை​யும் அதன் நிலத்​தை​யும் எதிர்​தரப்​பினரிடம் ஒப்படைக்கும் கேள்வியே எழவில்​லை. எனவே, சட்​டப்​படி நீதிமன்றமே இந்த விவ​காரத்​தில் முடி​வெடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

அகில இந்​திய முஸ்​லிம் தனிச்​சட்ட வாரிய செய்​தித் தொடர்​பாளர் டாக்​டர் இலி​யாஸ் கூறிய​தாவது: கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி​யன்று வழி​பாட்​டுத் தலங்கள் எந்த நிலை​யில் இருந்​தனவோ, அதே நிலை தொடர வேண்​டும். அதை மாற்ற முடி​யாது என்று அந்​தத் தீர்ப்​பில் கூறப்பட்​டுள்​ளது. எனவே, வழி​பாட்​டுத் தலங்​கள் சட்​டம், உச்ச நீதிமன்ற தீர்ப்​பின்​படி, ஒரு சொத்து மசூ​தி​யாக இருந்​தால், அதன் மீது உரிமை கோரு​வதற்கோ அல்​லது அதன் மதத் தன்​மையை மாற்​று​வதற்கோ நீதி​மன்​றத்​தில் முறை​யிட முடி​யாது. எனினும், மசூ​தி​களின் மதத் தன்​மையை மாற்​றக் கோரும் இந்து மனுதாரர்களின் மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் அனு​ம​தித்து வருகிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.