புதுடெல்லி: ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் ராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆர்ஜேடி எம்பி சுதாகர் சிங், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் நரேந்திர குமார் கோசுவாமி, மதுரையைச் சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத்தின் கே.கே. ரமேஷ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு அதன் நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மனுக்கள் தொடர்பாக அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
July 14, 2026
இந்தியா
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்