தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முதலமைச்சர் பொறுப்பு இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. இவரது அரசு நிர்வாகம் குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் இதுவரை திருப்திகரமாக இல்லை என்றும், வருங்காலத்தில் அவரது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவின் இந்த அதிரடி விமர்சனம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில், இந்தச் நேர்காணலின் போது அவருக்கு அருகில் இருந்து அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவும் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இக்காலகட்டத்தில், ஒரு மூத்த பிரபலத்தின் இந்த மாறுபட்டக் கருத்து அரசியல் வட்டாரத்திலும், இணையவாசிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.