மதுரை, செப்.17: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க. ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் வீர ராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் மதார் பதூருதின், அ. கல்லாணை, எஸ்.ஆர். தங்கப்பாண்டி, சோ. கார்த்திகேயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம். கோபிசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) / துணை மேயர் தி. நாகராஜன், மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் உள்ளிட்ட பிற மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். விழா சிறப்பாக நடைபெறுவதற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.