மதுரை, செப்.8-

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு விழாவை

யொட்டி, பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு விழா வரும் 17ஆம் தேதி நடை

பெற உள்ள நிலையில், வடக்கு ஆடி வீதியில் 56 யாகசாலைகள் மற்றும் 184 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் விறு

விறுப்பாக நடைபெற்றன.

இதில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தலா 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. குடமுழுக்கிற்கான யாகசாலை பணிகளுக்காக காசியில் இருந்தும், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் தலா ஆயிரத்து 8 லிட்டர் புனிதநீரும் கொண்டுவரப்பட்டன.

மேலும், 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களும் கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கோயிலில் உள்ள 514 சுவாமிகளுக்குத் தேவையான சிறிய, பெரிய பித்தளைக் கலசங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றில் நூல் சுற்றும் பணிகளும் நடைபெற்றன.

இதுதவிர யாக சாலையில் பட்டர்கள் அமருவதற்கு தேவையான மரப்பலகைகள் மற்றும் தேவையான பொருட்களும் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றன. குடமுழுக்கு ஏற்பாடுகள் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றன.