மும்பை: மகாராஷ்டிரா அரசு ‘மாஜி லட்கி பஹின் யோஜனா’ என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதில் 2.4 கோடி பேர் பயன்​பெற்று வந்தனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இ-கேஒய்சி சரி​ பார்ப்பு பணி​களை பயனாளி​கள் 8 மாத அவகாசத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்​டும் என்று அம்​மாநில அரசு அறிவித்திருந்​தது. இந்த விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்காத சுமார் 80 லட்​சம் பேரை திட்டத்திலிருந்து அம்​மாநில அரசு நீக்கியுள்​ளது. இதன் ​மூலம் இதற்கு முன் நீக்கப்​பட்டவர்​களின் எண்​ணிக்கையையும் சேர்த்து, தற்போது நீக்கப்பட்டோர் எண்​ணிக்கை 92 லட்​சத்​தைக் கடந்​துள்​ளது.


இதையடுத்து மொத்தமுள்ள 2.4 கோடி பயனாளிகளில் தற்​போது

38% பேர் குறைக்கப்பட்டுள்ளனர். பல்​வேறு காரணங்​களின் அடிப்படை​யில் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்​ளது. சுமார் 50 முதல் 55 லட்​சம் பெண்​கள் இ-கேஒய்சி நடை​முறையை முடிக்கவில்லை. 12 லட்​சம் பெண்​களின் வரு​மானம் நிர்ணயிக்கப்பட்ட வரு​மான வரம்​பைத் தாண்​டி​யுள்​ளது. 4.5 லட்​சம் பேர் 65 வயது வரம்​பைக் கடந்​தவர்​கள். இத்​திட்​டத்​தில் முறை​கே​டாக பலன் பெற முயன்ற 14,000 ஆண்​களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்​ளன. நீக்கப்பட்டவர்​களின் பட்டியலில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 28 லட்​சம் பெண்கள் நீக்கப்பட்டுள்​ளனர்.