பிரபல குணச்சித்திர நடிகரான வி.சி.ஜெயமணி, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். 'திருமதி செல்வம்' தொடரில் 'பூங்காவனம்' கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், 'மெட்டி ஒலி', 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட பல தொடர்களிலும் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறு வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் காட்டி, மேடை நாடகங்கள் வாயிலாகத் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். நடிகராக மட்டுமன்றி, சின்னத்திரையில் பல தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மெட்டி ஒலி, கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், 40-க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனது வீட்டில் வி.சி.ஜெயமணி இன்று காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.