செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாமக ராமதாஸ் - அன்புமணி என்று இரு பிரிவுகளாக பிளவுபட்டது. இருதரப்பினரும் மாறிமாறி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து வந்தனர். இது கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், தேர்தலுக்குப் பிறகு ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராமதாஸ், இனி பாமக தலைவராக அன்புமணி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.