நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று கூடியதுமே, காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் போராட்டம் மீதான காவல் துறை அடக்குமுறை விவகாரங்களை எழுப்பினார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விவாதத்துக்கு தயாராக இருக்கிறது. என்ன மாதிரியான விவாதம், எப்போது நடத்தலாம் என்பதை அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றார்.

அதற்கு அகிலேஷ் யாதவ், “இது அரசியல் கட்சிகளின் விவகாரம் அல்ல. இது இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்தது. இதில் ஏன் பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கூடாது? நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுபவர் உள்ளேயும் பேசலாமே” என்றார். மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.