தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தேசிய தலைமை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.