புதுடில்லி: தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த பொதுத் தேர்வு( முறைகேடுகள் தடுப்பு) மசோதா ராஜ்யசபாவில் இன்று( ஜூலை 30) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

நீட் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிய விடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோ தாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்த புதிய மசோதாவை மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 27ல் லோக்சபாவில் தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.