தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் கே.பாக்யராஜ் பெயரிலேயே போட்டியிடுகின்றன. பொதுச்செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலிகான், ஆர்.சுந்தர் ராஜன், 2 பேர் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு, யார் கண்ணன், சமுத்திரக்கனி, சினேகன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 4 பேர் கொண்ட இணைச் செயலாளர் பதவிக்கு 8 பேரும் 12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்டியிடுகின்றனர்.
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் 2 அணிகள் மோதல்
July 15, 2026
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்