சென்னை: மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழக சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.