சென்னை: தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக சரிந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது.


சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இன்றி, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (ஜூலை 14) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,05,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஒரு லட்சத்து 05 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 180 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 240க்கு விற்பனை செய்யப்படுகிறது.