டோக்கியோ: ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடி​யில் 10 கி.மீ ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 7.1 ஆக பதி​வானது. இதைத் தொடர்ந்​து, ஒரு மீட்​டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்​கூடும் என ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் அது 2 மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது. இந்தநிலையில், நிலநடுக்கத்தில் 13 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் சனே டகேச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரகால பேரிடர் நிவாரணக் குழுவை அமைத்துள்ளேன். அதற்கு நானே தலைவராக செயல்படுவேன். அதன் உறுப்பினர்களாக சில கேபினட் அமைச்சர்கள் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில், மின்சார துண்டிப்பு, குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. மேலும் கோடை வெப்பம் காரணமாக மக்களுக்கு ‘ஹீட் ஸ்டோர்க்’ ஏற்படும் அபாயமும் இருக்கின்றது. எனவே நிலைமையை உற்றுநோக்கி உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான உயிரிழப்புகள் கஷிமா நகரில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் தான் நடந்துள்ளது. வணிக வளாக இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.