சென்னை, செப். 20-

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 18-20 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்ற (WEF) ஆண்டு கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மன்றத் தலைவர் அலோயிஸ் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் லண்டன் சென்ற முதல்வர் ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் விஜய் கடந்த செப்.10 ஆம் தேதியில் லண்டன் சென்றாா். இந்த பயணத்தில் ரூ. 15,300 கோடி மதிப்பில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு

ள்ளது.

இந்த நிலையில், மேலும் புதிய முதலீடுகளை தமிழ

கத்துக்குக் கொண்டு

வருவதற்காக முதல்வர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள

விருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய முன்னணி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொள்கி

ன்றனர்.

2024, 2025-ல் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டங்களில் அப்போதைய திமுக அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், வருகிற ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய்க்கு உலக பொருளாதார மன்றத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்விங்கி மற்றும் இயக்குநர் கைரூஸ் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற வருடாந்திரக் கூட்டம் 2027-ல் முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.