பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறை என்பதால் கோவை ஐ.டி. நிறுவன ஊழியர் 2 பேர் உள்ளிட்ட 5 பேர் இங்கு சுற்றுலா வந்தனர். அந்த காட்டாற்று வெள்ளத்தில் குளித்தனர்.

இதில் பானுபிரியா (34), பரத் ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் மற்றவர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். தகவலறிந்து வடக்கஞ்சேரி வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 250 அடி பள்ளத்தில் கயிறு கட்டி 2 பேரையும் மீட்டனர். இதில் பானுபிரியா உயிரிழந்தார். பரத் உள்ளிட்ட 4 பேர் தப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.