கிளாஸ்கோ: 23-வது காமன்​வெல்த் விளை​யாட்டு போட்டி ஸ்காட்​லாந்​தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஓவோ ஹைட்ரோ மைதானத்​தில் இந்​திய நேரப்​படி நேற்று அதி​காலை கோலாகல​மாக தொடங்​கியது. தொடக்க விழா​வானது இசை மற்​றும் ஸ்காட்​லாந்து பாரம்​பரியப் பெரு​மை​கள் நிறைந்த வண்​ணங்​களின் கலவை​யாக மாறி​யிருந்​தது.

பிரிட்​டன் மன்​னர் மூன்​றாம் சார்​லஸ் மற்​றும் அரசி கமிலா ஆகியோர் விழா​வில் கலந்து கொண்​டனர். மூன்​றாம் சார்​லஸ் போட்​டிகளை முறைப்​படி தொடங்கி வைத்​தார். கிளாஸ்கோ காமன்​வெல்த் விளை​யாட்​டில் 74 நாடு​களைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்​டுள்​ளனர்.

தொடக்க விழா​வானது பிரம்​மாண்​ட​மான திறந்​தவெளி மைதான நிகழ்​வு​களி​லிருந்து மாறு​பட்டு 14,300 பேர் அமரக்​கூடிய உள்​அரங்​கிற்​குள்​ளேயே முழு​மை​யாக நடத்​தப்​பட்​டது. இந்த முறை​யில் தொடக்க விழா நடத்​தப்​படு​வது காமன்​வெல்த் விளை​யாட்டு வரலாற்​றிலேயே இதுவே முதல்​முறை​யாகும். மற்​றொரு முன்​னோடி நிகழ்​வாக, 74 நாடு​களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்​கள் நிகழ்ச்​சி​யின் இறு​தி​யில் அணிவகுத்து வரு​வதற்​குப் பதிலாக, தொடக்​கத்​திலேயே அரங்​கிற்​குள் அணிவகுத்து வந்​தனர். இந்​திய தேசி​யக் கொடியை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற மீரா​பாய் சானு, லோவ்​லினா போர்​கோஹெய்ன் ஆகியோர் ஏந்தி வந்​தனர். இந்​திய வீரர்​கள் அடர் நீல நிற சூட்​களி​லும், வீராங்​க​னை​கள் புடவை மற்​றும் பிளேசர்​கள் அணிந்​திருந்​தனர்.