புதுடெல்லி: ‘‘கோரிக்​கைகளை நிறைவேற்​றா​விட்​டால், எங்​களது அடுத்​தகட்ட போராட்​டம் பெரிய அளவில் இருக்​கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்​சி​யினர் (சிஜேபி) அறி​வித்​துள்​ளனர். இதனால் டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தைத் தொடங்​கியது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி சிஜேபி கட்​சி​யினர், ஆதர​வாளர்​கள் பேரணி சென்​றனர். அப்​போது, போராட்​டக்​காரர்​கள் - போலீ​ஸார் இடையே தள்​ளு முள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகை குண்​டு​கள் வீசி​யும் கூட்​டத்​தைக் கலைத்​தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரான்கா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, கடந்த 20-ம் தேதி நடந்த போராட்​டம் வெறும் முன்​னோட்​டம்​தான் (டிரெய்​லர்). அடுத்​தகட்​ட​மாக எங்​களது போராட்​டம் மிகப்​பெரிய அளவில் இருக்​கும் என்றார். இந்த பதற்​ற​மான சூழ்​நிலை​யில், சிஜேபி​யினரின் அடுத்​தகட்ட போராட்ட அறி​விப்​பைத் தொடர்ந்து சிஆர்​பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்​பெனி துணைராணுவ​படையினர் நேற்று கொல்​கத்​தா​வில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்​தடைந்​தனர். டெல்​லி​யின் ஜந்​தர் மந்​தர் உள்​ளிட்ட முக்​கிய இடங்​களில் துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.