மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ளது பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்த வளாகம் ஆகும். இங்கு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த பிரிவில் பணியாற்றக்கூடிய பிரபல பேஷ் பேஷ் காபி நகைச்சுவை நடிகர் பெயர் கொண்ட ஒருவர் எப்போதுமே ஒரு கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் போடப்பட்டவுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே சிவாஜி படத்தில் ரஜினியிடம் கேட்பது போல் உங்கள் ப்ராஜெக்டோட மொத்த மதிப்பு எவ்வளவு அதில் ஒரு சதவீதம் தந்துவிட வேண்டும் என கறாராக வசூலித்து விடுகிறாராம். கடந்த 3 ஆண்டுகளில் கண்காணிப்பு பொறியாளராக யார் வந்தாலும் இவர் வரைவில்லாமல் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நேர்மையான கண்காணிப்பு பொறியாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர் உள்ளிட்ட சில நபர்கள் மேற்கண்ட வசூல் வேட்டைகளில் ஈடுபடுவதால் தொடர்ந்து ஒப்பந்தம் எடுத்து பணியாற்றக்கூடிய பலர் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக கடந்த காலத்தில் நடைபெற்ற இந்த தவறுகளை கலைந்து இது போன்ற நபர்களை மதுரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் இருந்து களை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் சரியான நேரத்தில் இங்கும் நடத்தினால் சம்பந்தப்பட்ட ஊழல் பேர் வழிகள் சிக்குவார்கள் என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஒப்பந்தம் போடப்பட்டவுடன் லஞ்சத்தொகை! கடந்த கால தவறுகளில் இருந்து மீளுமா மதுரை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்
July 06, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்