பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதையடுத்து அவரை சிறையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற இன்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் 48 மணி நேரத்தில் அவரை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அவருடன் அவரது தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உடனிருக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான்கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு
August 18, 2026
உலகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்