புதுடெல்லி: உல​கக் கோப்பை ஹாக்கி தொடரில் விளை​யாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்​திலிருந்து காவி நிறத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. இது பல்​வேறு சர்ச்​சைகளை உரு​வாக்கி உள்ளது.

சர்​வ​தேச ஹாக்கி கூட்​டமைப்பு நடத்​தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்​ஜி​யம் மற்றும் நெதர்​லாந்​தில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் இந்​திய ஆடவர், மகளிர் அணி​களின் சீருடை பாரம்​பரியமிக்க நீல நிறத்​துக்கு பதிலாக முழு​வது​மான காவிநிறத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தனது அதி​காரப்​பூர்வ சமூக வலைதள பக்​கத்​தில் இந்​திய ஹாக்கி அணி​யின் புதிய சீருடையை ஹாக்கி இந்​தியா அமைப்பு வெளி​யிட்​டுள்​ளது. வீரர்​கள் மற்​றும் உதவிப் பணி​யாளர்​களு​டன் கலந்​தாலோ​சிக்​கப்​பட்ட பிறகே இந்த ஆடை வடிவ​மைப்பு இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக ஹாக்கி இந்​தியா அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

இந்​திய ஹாக்கி அணி​யின் முன்​னாள் கேப்​டன் விரேன் ரஸ்​கின்ஹா தனது எக்ஸ் பதி​வில், “இந்​திய ஹாக்கி நிர்​வாகம் நாட்​டிற்​காக பல நல்ல காரி​யங்​களைச் செய்​துள்​ளது என்​பதை நான் ஒப்​புக்​கொண்டே ஆக வேண்​டும். ஆனால், தற்​போது இந்த சீருடை நிற மாற்ற நடவடிக்கை உண்​மை​யிலேயே சங்​கடத்தை ஏற்​படுத்​துகிறது. இந்​திய அணி​யின் பாரம்​பரிய​மும் அடை​யாள​மும் எப்​போதும் 'நீல நிறம்' தான். பல ஆண்​டு​களாக அந்த நீல நிறச் சீருடையை நான் மிகுந்த பெரு​மை​யுடன் அணிந்து விளை​யாடி​யிருக்​கிறேன். ரசிகர்​கள் நமது இந்​திய அணியை நீல நிறத்​திலேயே பார்க்க விரும்​பு​கிறார்​கள். இதில் காவி நிறத்​தைக் கொண்டு வந்​ததன்​ தர்க்​கம்​ என்​னவென்​று புரிய​வில்​லை?" எனத்​ தெரி​வித்​துள்​ளார்​. இதே போல், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.