காத்மாண்டு: நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். இந்நிலையில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் நேற்று வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை அடித்​துச் சென்று பேரழிவை ஏற்​படுத்​தி​யது. ஆற்​றுப் படு​கையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள் நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் சரிந்து விழுந்​தன. பெரும் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதுதொடர்​பான ஏராள​மான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

வெள்​ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். இந்நிலையில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.