நடிகர் ரஜினிகாந்த் மூத்த நடிகை காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய்.ஜி.பி. விருதை ரஜினிகாந்த் வழங்கினார் அப்போது வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். மேலும், அவரை வெகுவாகப் பாராட்டி மேடையில் பேசினார்.

தமிழ் நாடக ஆசிரியர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், கல்வியாளருமான மறைந்த ராஜலட்சுமி நூற்றாண்டு விழா, சென்னையில் நடந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதி - ராஜலட்சுமி தம்பதியரின் மகனும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் - சுதா, பேத்தி மதுவந்தி ஏற்பாட்டில் இந்த விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு, கலாச்சார மேன்மைக்கான விருதை வழங்கி கவுரவித்தார். .

அப்போது வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். மேலும், அவரை வெகுவாகப் பாராட்டி மேடையில் பேசினார். வேல்ஸ் கல்வி குழும நிறுவனர் ஐசரி கணேஷ், ரஜினிகாந்தின் மனைவி லதா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பரதநாட்டிய கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியன், ஷோபனா, பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், வயலின் இசைக்கலைஞர் லால்குடி கிருஷ்ணன், தொழில் அதிபர் ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.

இந்திய அரசின் 3-வது மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருது பெற்றவர் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா. சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் பரத நாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார். 1949-ம் ஆண்டு வெளியான வாழ்க்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.