சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான தோனிக்கு சொந்த ஊரான ராஞ்சியில் மட்டும் 3 வீடுகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் தற்போது புதிதாக ஒரு வீட்டை தோனி கட்டி வருகிறார். இந்த 4 வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக தோனி வலம் வந்து கொண்டிருக்கிறார். 44 வயதை எட்டிவிட்ட நிலையில், 2026 ஐ.பி.எல் தொடருடன் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சி.எஸ்.கே. அணிக்குள் தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரரான கார்த்திக் சர்மாவையும் சி.எஸ்.கே. அணி ரூ.14.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால் தோனியின் கடைசி சீசனாக இது அமையலாம். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் சில போட்டிகளில் மட்டுமே தோனியை பார்க்க முடியும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் சொந்த ஊரான ராஞ்சியில் தோனி புதிய வீடு ஒன்றை கட்டி வருவது தெரிய வந்துள்ளது. இதுவரை ராஞ்சியில் தோனியின் பெயரில் 3 வீடுகள் இருக்கின்றன. தற்போது 4-வது வீட்டை தோனி கட்டி வருகிறார். தோனியின் முதல் வீடு மெகான் ஸ்டேடியம் எதிரில் உள்ள மெகான் குவார்ட்டர்ஸில் இருக்கிறது. அங்குதான் தோனி சிறுவயதில் வாழ்ந்தார். அந்த வீடு பூட்டி இருந்தாலும், தோனியின் ரசிகர்கள் பலரும் அந்த வீட்டின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.