கொம்பு சீவி திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வந்த நடிகர் சண்முகபாண்டியனிடம் விஜயகாந்தின் பெண் ரசிகை ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்ட போது அவர் என்ன பெயர் வைத்தார் தெரியுமா?

பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான படம் கொம்பு சீவி. இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்க்க சென்னையில் ஒரு தியேட்டருக்கு சண்முகபாண்டியன் வந்திருந்தார். அப்போது அவர் படத்தின் பிரமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அத்தனை சுலபமாக எடுத்துவிட முடியாது. அதற்கேற்ற இயக்குநர்கள் இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

அப்போது விஜயகாந்தின் ரசிகை ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சண்முகபாண்டியனிடம் கேட்டார். அதற்கு அவர் "நானா என தயங்கினார். பிறகு தனது அப்பா, அம்மாவின் பெயர்களை சேர்த்து விஜயலதா என பெயரிட்டார். அப்போது அவருடன் இருந்த விஜயகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.