மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா, டி.வி.எஸ். நகரில் உள்ள மு.க. அழகிரி வீட்டுக்கு சென்றார். அவருடன் உறுவினர்களும் உடன் சென்றனர். சுமார் ஒரு மணி நேரமாக மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல் நலன் குறித்தும், மற்றும் அனைவருடைய நலன் குறித்தும் துர்கா ஸ்டாலின் விசாரித்தார். அதை தொடர்ந்து அவருக்கு மதியம் விருந்து அளிக்கப்பட்டது. பின்பு மு.க. அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மற்றும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்கு சென்று அங்கு அம்மனை தரிசித்து விட்டு சென்னை திரும்பினர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,மு.க. அழகிரி வீட்டுக்கு சென்று குடும்ப நலன் குறித்து விசாரித்து சென்றது கட்சியினரிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மதுரை அரசியல் நிலவரம் குறித்தும், மதுரை மேயர் மண்டல தலைவர்கள் நியமனம் குறித்தும் காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலினிடம் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அது மட்டுமல்லாது, மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் மீண்டும் அழகிரியை முனைப்பாக செயல்படுவார் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.