பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இம்ரானின் சகோதரி அலீமா கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில், வாரத்திற்கு இரண்டு முறை இம்ரானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இம்ரான் கானை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இம்ரானை சந்திப்பதற்கு அனுமதிக்கும் உத்தரவுகள் இருந்தபோதிலும் சிறை நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.