ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.