ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம், வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் வெளியான செல்ல மகளே பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் தான் வைரலாகி வருகிறது. பாடலில், விஜய்க்கு மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் யார் என்ற கேள்வி தற்போது பலரிடமும் எழுந்துள்ளது. ஜன நாயகன் படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரத்தின் பெயர் லிதன்யா சிவபாலன் தான்.
சிறு வயதிலேயே தொலைக்காட்சி மற்றும் சினிமா உலகில் கவனம் பெற்று வருகிறார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த கேபிரில்லாவின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான லிதன்யா, டாப் குக் டூப் குக், நானும் ரவுடிதான் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும், ரவி மோகன் நடித்த சைரன், பிரதர் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள லிதன்யா, தற்போது விஜய்யின் ஜன நாயகன் படத்தின் மூலம் மேலும் பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.