அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வெளியான அறிக்கையில், கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வருகின்ற 10.12.2025 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச்செல்வன் ஆகியோர் கலந்தாலோசித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.