கீ​தா கைலாசம், சரண் சக்​தி, பரணி, முல்​லை​யரசி, தென்​றல் ரகு​நாதன், வினோத் ஆனந்த் உள்பட பலர் நடித்​துள்ள படம் அங்கம்மாள். எழுத்​தாளர் பெரு​மாள் முரு​க​னின் கோடித்​துணி சிறுகதையை தழுவி உரு​வாக்கப்​பட்​டுள்ள இப்​படத்தை விபின் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ளார். டிச.5ல் (இன்று) வெளி​யாகும் இப்​படத்​தில் தைரி​யம், கருணை மற்​றும் தாய்​மை​யின் சொல்​லப்​ப​டாத நம்​பிக்கை கள் ஆகிய​வற்றை அங்​கம்​மாள் கதா​பாத்​திரம் மூலம் பிர​தி பலித்திருக்​கிறார் கீதா கைலாசம்.

இதுபற்றி கீதா கைலாசம் கூறும்​போது, அங்​கம்​மாள் கதா​பாத்​திர​மாக மாறு​வதற்கு நேர்​மை​யாக இருக்க வேண்​டும். இதனால் ஒவ்​வொரு பிரேமிலும் நான் நடிக்​கும் முறையே மாறியது. இந்​தக் கதையை இவ்​வளவு உணர்​வுடன் வடிவ​மைத்த இயக்​குநருக்கு நன்​றி. ரிகர்​சல் மூலம் அல்​லாமல் அந்த கதா​பாத்​திரத்தை உணர்ந்து நடிக்க அனு​ம​தித்​தார்.

சரண் சக்தி மற்​றும் அனைத்து நடிகர்​களின் நடிப்​பும் இந்​தக் கதையை உண்​மை​யாக உணர வைத்​தது. படப் ​பிடிப்​பில் சிங்- சவுண்​டுடன் நடிக்க வேண்​டி​யிருந்​த​தால் நாங்​கள் சின்​சி​ய​ராக நடித்தோம். இந்​தப் படம் எங்​களுக்கு மட்​டுமல்ல பார்​வை​யாளர்​களுக்​கும் புது அனுபவத்​தைக் கொடுக்​கும்​ என்​றார்​.